என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மாநிலங்கள் உருவான நாள்
நீங்கள் தேடியது "மாநிலங்கள் உருவான நாள்"
மாநிலங்கள் உருவான நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்றபோது, நாட்டின் பல பகுதிகள் மாகாணங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தன. பின்னர், 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி அன்று சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் உருவாகின. இதேபோல், வட இந்தியாவில் மத்திய பிரதேசம், அரியானா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் ஒருங்கிணைந்த சமஸ்தானத்தில் இருந்து உதயமானது.
இதனால், நவம்பர் 1-ம் தேதியை மாநிலங்கள் உருவான நாளாக, ஆண்டுதோறும் அந்தந்த மாநில அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த மாநில மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதிவிட்டிருப்பதாவது:-
மொழிவாரியாக மாநிலங்களாக உருவான நாளன்று ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், அரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வசிப்பவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்...நெல்லை, தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்
×

X